Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்மல்லையாவை சந்திக்கவில்லை: அருண்ஜெட்லி மறுப்பு

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2018 (19:43 IST)
பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்றுவிட்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி சென்றுவிட்ட நிலையில் அவரை இந்திய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

இந்த நிலையில் நாட்டைவிட்டு வெளீயேறும்  முன்னர் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து எனது நிலைமையை விளக்க முயற்சித்ததாகவும், வங்கிக்கடன் குறித்து அவரிடம் முக்கிய ஆலோசனை செய்ததாகவும் இங்கிலாந்தில் விஜய் மல்லையா பேட்டி அளித்திருந்தார்.

இந்த பேட்டி இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஜய்மல்லையாவின் இந்த பேட்டிக்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார். விஜய்மல்லையாவை நான் சந்தித்ததாக வெளியான தகவல் பொய்யானது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரை என்னை சந்திக்க விஜய்மல்லையாவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments