லண்டன் டெஸ்ட் போட்டி: இந்தியா போராடி தோல்வி

Webdunia
செவ்வாய், 11 செப்டம்பர் 2018 (22:01 IST)
லண்டலில் நடைபெற்று வந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளூக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி 118 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்திய அணி வெற்றி பெற இங்கிலாந்து அணி 464 ரன்கள் இலக்கு கொடுத்திருந்தது. இந்த நிலையில் புஜாரே மற்றும் விராத் கோஹ்லி ரன் ஏதும் எடுக்காமலும், தவான் ஒரு ரன்னிலும் அவுட் ஆகினர். இருப்பினும் ராகுல் சிறப்பாக விளையாடி 149 ரன்களும், பேண்ட் 114 ரன்களும் எடுத்ததால் இந்திய அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் ராகுல், பேண்ட் இருவரும் அவுட்டான நிலையில் இந்திய அணியின் மற்ற விக்கெட்டுக்கள் சொற்ப ரன்களில் இழந்தது.

இறுதியில் இந்திய அணி 94.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 345 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இங்கிலாந்து அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

நான் இன்னும் யூனிவர்ஸ் பாஸ்தான் – சொன்னதை செய்த கெய்ல் !

இந்தியா உலகக்கோப்பையில் விளையாடுமா ?– பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தடாலடி !

உலகக் கோப்பை ; பாகிஸ்தானுக்குத் தடையா ? – கவாஸ்கர் விளக்கம் !

ஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?

சிறை செல்கிறாரா அனில் அம்பானி ? – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

தொடர்புடைய செய்திகள்

இந்தியா உலகக்கோப்பையில் விளையாடுமா ?– பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தடாலடி !

உலகக் கோப்பை ; பாகிஸ்தானுக்குத் தடையா ? – கவாஸ்கர் விளக்கம் !

நான் இன்னும் யூனிவர்ஸ் பாஸ்தான் – சொன்னதை செய்த கெய்ல் !

தோனியைக் கண்டு அழுகும் குழந்தை... வைரலாகும் வீடியோ

நானும் ரௌடிதான் - சிறப்பான, தரமான சம்பவம் செய்த புஜாரா !

அடுத்த கட்டுரையில்