நடிகையின் ஆபாச படங்களை வெளியிட்ட இளைஞருக்கு கிடைத்த தண்டனை!

Webdunia
சனி, 1 செப்டம்பர் 2018 (11:07 IST)
பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லாரன்ஸ். இவர் எக்ஸ் மேன் பஸ்ட் கிளாஸ், அமெரிக்கன் ஹசில், செரீனா,  உள்பட பல படங்களில் நடித்து உலகப் புகழ் பெற்றவர். 

அண்மையில் ஜெனிபர் லாரன்சின் இணையதள கணக்குகளை ஒரு இளைஞர் ஹேக் செய்து, அதற்குள் இருந்த நிர்வாண படங்களை திருடி வெளியிட்டு விட்டான். இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. ஜெனிபர் லாரன் இதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தனது அந்தரங்க படங்கள் வெளியானது குறித்து ஜெனிபர் லாரன்ஸ் கூறும்போது, ‘‘என்னை பலர் சேர்ந்து கற்பழித்ததுபோல் இருக்கிறது’’ என்றார். இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை நடத்தி ஜெனிபர் கணக்கை ஹேக் செய்து நிர்வாண படங்களை எடுத்த ஜார்ஜ் ஹரோபனோ என்ற 26 வயது இளைஞரை கைது செய்தனர்.

இதையடுத்து ஜார்ஜ் ஹரோபனோவுக்கு நீதிபதிகள் 8 மாதம் சிறை தண்டனை அளித்தும தண்டனை காலம் முடிந்த பிறகு மேலும் 3 வருடங்கள் சில நிபந்தனைகளுடன் வெளியில் தங்கி இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தனர்.

இது எப்போ? லிஃப்ட்டில் லிப் டூ லிப் கொடுக்கும் மகத்...

கிளம்பிட்டாலே விஜய லட்சுமி! காற்றின் மொழி டீசரை வெளியிட்ட சூர்யா

த்ரிஷாவுடன் ரஜினியின் பிளாஷ்பேக்: பேட்ட அப்டேட்

இளம்பெண்ணுடன் ஜல்ஷா செய்யும் கல்லூரி நிர்வாகி - அதிர்ச்சி வீடியோ

புரட்டாசி மாத ராசி பலன்கள் 2018

தொடர்புடைய செய்திகள்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தின் டைட்டில் அறிவிப்பு

கிளம்பிட்டாலே விஜய லட்சுமி! காற்றின் மொழி டீசரை வெளியிட்ட சூர்யா

த்ரிஷாவுடன் ரஜினியின் பிளாஷ்பேக்: பேட்ட அப்டேட்

தென்காசியில் 'உறியடி 2' ஷூட்டிங்: படத்தின் மோசன் போஸ்டரை வெளியிட்ட சூர்யா

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட பிரியங்க சோப்ரா...

அடுத்த கட்டுரையில்