இணை இயக்குநரை கல்யாணம் செய்து கொள்ளும் ‘ரங்கூன்’ இயக்குநர்

Webdunia
திங்கள், 14 மே 2018 (16:07 IST)
‘ரங்கூன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தன்னுடன் பணியாற்றிய இணைஇயக்குநரையே கல்யாணம் செய்து கொள்ள இருக்கிறார்.
 
‘ரங்கூன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி.கெளதம் கார்த்திக் நடித்த இந்தப் படத்தில், இணை இயக்குநராகப் பணியாற்றியவர் ஜஸ்வினி. இவர் ஏற்கெனவே இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் அசோஸியேட்டாகப் பணியாற்றியவர். இருவருக்கும் வருகிற 25ஆம் தேதி சென்னையில் கல்யாணம் நடைபெற இருக்கிறது.
 
கடந்த 2009ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘உங்களில் யார்அடுத்த பிரபுதேவா?’. இந்த நிகழ்ச்சியின் இயக்குநரும் ராஜ்குமார் பெரியசாமி தான். இந்த நிகழ்ச்சிக்கு இண்டர்ன்ஷிப்புக்காக வந்திருக்கிறார் ஜஸ்வினி. எனவே, கடந்த 9 வருடங்களாகத் தொடர்ந்த நட்பு, தற்போது திருமணத்தில் முடிய இருக்கிறது.
 
ஜஸ்வினிக்கும் இயக்குநராக வேண்டும் என்பது ஆசையாம். ஒரே குடும்பத்தில் இரண்டு இயக்குநர்கள்… வாழ்த்துகள்!

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்? அதிர்ச்சி தகவல்

அரவிந்த சாமி, மனோபாலாவுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஷங்கரின் 2.0 படத்தை அர்னால்டு இதனால்தான் நிராகரித்தாரா?

4 மாதங்களுக்கு அனைத்தும் இலவசம்: இந்த முறை ஜியோ அல்ல...

விஜய் படத்தின் பாடல் வரியை படத்தலைப்பாக்கிய சிவகார்த்திகேயன்?

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த சாமி, மனோபாலாவுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் இருந்து ஆஸ்கார் இயக்குனர் விலகல்

விஜய் படத்தின் பாடல் வரியை படத்தலைப்பாக்கிய சிவகார்த்திகேயன்?

பிக்பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்? அதிர்ச்சி தகவல்

அடுத்த கட்டுரையில்