விநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர்; எருக்கம் பூ...!

Webdunia
சதுர்த்தி அன்று விநாயகர் பெருமானை நாம் உரிய முறையில் வழிபடுவோமெயானால் நிச்சயம் நமது அனைத்துப் பிரச்சனைகளிலும் இருந்து ஒரு நிரந்தர தீர்வு  கிட்டும்.
நம் வீட்டில் எந்த சுபகாரியத்தினை ஆரம்பித்தாலும் முதலில் விநாயகரை வணங்கிதான் தொடங்குவோம். எல்லா  தெய்வங்களையும் பூஜை செய்து பலன் பெற முதலில் கணபதியைத்தான் வழிபடுவது வழக்கம். எல்லா யாகங்களிலும் முதலில் விநாயகருக்குத்தான் முதல் மரியாதை. விநாயகருக்கு உகந்தது எருக்கம் பூ.
 
எருக்கன் செடிகளில் பல வகைகள் உண்டு. எருக்கம் பூ செடிகள் அனைத்தின் பாகங்களும் ஏதேனும் மருத்துவ பயன்பாடு நிச்சயம் உள்ளது. மருத்துவ பயன்கள்  மட்டுமின்றி இறை வழிபாட்டிற்கும் சிறந்த மலராக எருக்கன் பூ திகழ்கின்றது.
 
“தெய்வீக மூலிகை” பெருமையுடன் விளங்கும் எருக்க பூவில் ஒன்பது வகைகள் உள்ளனவாம். அதில் நமது கண்ணில் அதிகம் படுபவை கத்தரிபூ நிற எருக்கம்  செடிதான். அதற்கடுத்து பிரபலமான வெள்ளெருக்கு எனப்படும் வெள்ளை நிற பூ மலரும் எருக்கஞ் செடி, இவையிரண்டும் அதிகமாக பயன்படுகிறது.
 
விநாயகர் வழிபாட்டில் இவ்விரண்டு எருக்கம் பூவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளெருக்கம் பூவை சிவனுக்கு அர்ச்சனை செய்ய பயன்படுத்துகின்றனர். காலையில் வெள்ளெருக்கம் பூவை கொண்டு பூஜை செய்தால் நல்ல பலனை பெறலாம்.
 
“அர்க்க புஷ்பம்” என சமஸ்கிருதத்தில் அழைக்கப்படும் எருக்கம் பூ விநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர். சூரியனுக்கு “அர்க்கன்” என்று பெயருண்டு.  சூரியனுக்கு உகந்த எருக்கம் பூவை விநாயகருக்கு அணிவித்து வணங்கும்போது விக்னங்கள் நீங்குவதுடன் சூரியனின் அருளால் ஆத்ம பலமும், ஆரோக்கியமும்  உண்டாகும். அனைவரும் எனிதாய் வணங்கும் விநாயகரை சாதாரணமாய் பூத்து கிடக்கும் எருக்கம் மலரில் வழிபட்டாலோ அனைத்து அருளும் வழங்குவார்.

நினைத்த காரியங்கள் வெற்றிப்பெற வணங்க வேண்டிய தெய்வங்கள்...!

கனவில் பாம்பு வந்தால் என்ன பலன்கள் தெரியுமா...?

வீட்டில் குபேர பொம்மையை எந்த திசையில் வைக்கவேண்டும்...?

என்ஜீனியரிங் மாணவியுடன் உல்லாசம்: பட்டதாரி வாலிபர் கைது

விருந்துக்கு சென்று விருந்தாகிய இளம்பெண்: அயோக்கியனின் வெறிச்செயல்

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்