மும்பையில் விநாயகர் சிலை நிறுவி உற்சாக கொண்டாட்டம்

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (12:34 IST)
விநாயகர் சதுர்த்தி விழா இந்த மாதம் 13-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், விநாயகர் சிலைகளை பக்தர்கள் அங்காங்கே நிறுவி வருகின்றனர். இதனால் மும்பை பகுதியை சேர்ந்த பக்தர்கள், கடந்த சனிக் கிழமை, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மிகப்பெரிய விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு வந்தனர். 
இந்த வருடம் வருகின்ற வியாழனன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படவிருகிறது. அதனால் மும்பை பகுதியில் இந்த விழாவை  வெகு சிறப்பாக கொண்டாட உள்ளனர். இதற்காக மிகப்பெரிய விநாயகர் முமபையில்சிலையை நிறுவியுள்ளனர். இந்த விநாயகர் சிலையின் பின்னால் பிரம்மா, சிவன், விஷ்ணு சிலைகளும் வைக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் வாழும் இந்துக்களால் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி. முழுமுதற்கடவுள்  கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி. இந்த விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.
 
வட இந்தியாவில் கூடுதல் உற்சாகத்துடன் பத்து நாட்களுக்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறுகின்றன. லட்சக்கணக்கான மக்கள் பங்குகொள்ளும் மிகப்பெரிய விழாவாகவும் உள்ளது விநாயகர் சதுர்த்தி. 
 
விநாயகர் சதுர்த்தியின் போது பக்தர்களால் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு தற்காலிகமாக விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்யப்படுகின்றன.  பிறகு விநாயகர் சதுர்த்தியின் நிறைவு நாளன்று தற்காலிகமாக நிறுவப்பட்டிருக்கும் இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.

ஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?

குலதெய்வ வழிபாடு கர்ம வினைகளை நீக்குமா...?

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (22-02-2019)!

சிறை செல்கிறாரா அனில் அம்பானி ? – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

அஜித் காட்டில் அடை மழை! உற்சாகத்தில் ரசிகர்கள்

தொடர்புடைய செய்திகள்

ஆஞ்சநேயரை வழிப்பட உகந்த நாட்கள் எவை தெரியுமா...?

தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்வது ஏன்? அதன் பலன்கள் என்ன...?

மகா சிவராத்திரி நாளில் சிவபெருமான் வழிபாடு....!

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (21-02-2019)!

வாஸ்துப்படி அறைகளை எந்தெந்த திசையில் அமைப்பது நல்லது...?

அடுத்த கட்டுரையில்