பாதாம் பருப்பில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...!

Webdunia
பாதாம் பருப்பில் மெலனின் மற்றும் கேரட்டின் புரதங்கள் அதிகளவு உள்ளன. பாதாம் பருப்புகளை தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது.
பாதாம் பருப்புகளை கருவுற்றிருக்கும் பெண்கள் சரியான விகிதத்தில் உட்கொண்டு வருவது, அவர்களுக்கும் அவர்கள் வயிற்றில் வளரும் கருவிற்கும்  நன்மையை அளிக்கும்.
 
பாதாம், பருப்புகளை அதிகம் உண்பதால் அதிலிருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரித்து ஜூரம், வைரஸ் தொற்று  போன்றவற்றிலிருந்து நம்மை காக்கிறது.
 
பாதாம், பருப்புகளை தினமும் சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு நரம்புகள் வலுவடையும், உயிரணுக்கள் அதிகரித்து மலட்டுத் தன்மை மற்றும் ஆண்மைக்குறைவு குறைபாடுகள் நீங்கும்.
 
பாதாம் பருப்புகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு சத்துக்கள் இல்லை. எனவே இப்பருப்புகளை அதிகம் உண்பவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.
 
பாதாம் பருப்புகளில் உணவை செரிக்கும் வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. அவற்றை அதிகம் உண்பவர்களுக்கு குடல் சார்ந்த அத்தனை குறைபாடுகளும்  நீங்கும்.
 
பாதாம் பருப்புகளில் தோலுக்கு நெகிழ்வு தன்மை, புத்துணர்வு பெற செய்யும் ரசாயனங்கள் அதிகம் உள்ளன. இது தோலுக்கு அதிக பளபளப்பை தருகிறது.
 
பாதாம் பருப்பில் மூளையையும் சிறுநீரகத்தையும் பாதுகாக்கும் பாஸ்பரஸ் உப்பு கால்சியத்தை விட இரு மடங்கு உள்ளது. இரத்த சோகையை குணப்படுத்தும் இரும்பு சத்தும் பாதாம் பருப்பில் தாராளமாக உள்ளது.

நெஞ்சு சளியை நீக்கும் எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்...!

வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்

தீபாவளி திருநாளில் செய்யப்படும் லட்சுமி குபேர பூஜை

ஒரு குடும்பத்திற்கு பித்ரு தோஷம் இருக்கிறதா என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?

சிலைகளுக்கும் #MeToo: சர்ச்சையில் சிக்கிய முத்த ஜோடி!

தொடர்புடைய செய்திகள்

கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி...?

உணவில் சுண்டைக்காயை சாப்பிட்டு வந்தால் ரத்தச் சர்க்கரை கட்டுப்படுத்தும்....!

வயிற்றில் இருக்கும் நச்சுகளை நீக்கி ஜீரண தன்மையை கொடுக்கும் இஞ்சி...!

இயற்கை மருத்துவத்தில் முக்கிய இடம் பெறும் மஞ்சள்.....!

மருத்துவ குணங்கள் நிறைந்த ஊமத்தை எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா...?

அடுத்த கட்டுரையில்