‘ஏ’ பட இயக்குநருக்கு கிடைத்த ‘யு’ சான்றிதழ்

Webdunia
வெள்ளி, 1 ஜூன் 2018 (12:59 IST)
‘ஏ’ பட இயக்குநரான சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியுள்ள மூன்றாவது படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். அடல்ட் காமெடிப் படங்களான இந்த இரண்டு படங்களுக்கும், மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்தது. இதனால் இவரை ‘ஏ’ பட இயக்குநர் அல்லது ‘பிட்டு’ பட இயக்குநர்  என்றுதான் அழைக்கிறார்கள்.
 
இந்நிலையில், ‘கஜினிகாந்த்’ என தன்னுடைய மூன்றாவது படத்தை இயக்கி முடித்துவிட்டார் சந்தோஷ் பி ஜெயக்குமார். ஆர்யா நாயகனாகவும், ‘வனமகன்’  சயீஷா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், சதீஷ், காளி வெங்கட், கருணாகரன், சம்பத் ராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், உமா பத்மநாபன், ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பாலமுரளி பாலு இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்தைப்  பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். எனவே, இந்தப் படத்தைக் குடும்பத்துடன் பார்க்கலாம்.

நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல்: ஜோதிகா பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை!

கறி விருந்துக்கு அழைத்த விஜய் டிவி பிரபலம்: என்ன விசேஷம்?

இரட்டை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் ...ரசிகர்கள் குஷி

அதிகாலையில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!

தினம் முட்டை சாப்பிடுவது நல்லதா...?

தொடர்புடைய செய்திகள்

அதனால்தான் நான் எதுவும் பேசல! பொள்ளாச்சி சம்பவத்திற்கு சமந்தாவின் ஷாக்கிங் பதில்!

கோவிலில் புகைப்படம் எடுத்த பிரபல நடிகை : கடுப்பான ரசிகர்கள்

‘ரவுடி’ ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த விஜய்!

'தளபதி 63 ' ரசிகர்கள் மீது தடியடி எதிரொலி! ஆக்க்ஷன் எடுத்த விஜய்!

நடிகை ஸ்ரீரெட்டி வீடு புகுந்து தாக்குதல் – மர்மநபர்கள் மீது புகார் !

அடுத்த கட்டுரையில்