Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் நோட்டு அறிவிப்பிற்கு 82 சதவீத இந்தியர்கள் ஆதரவு - சர்வே தகவல்

ரூபாய் நோட்டு அறிவிப்பிற்கு 82 சதவீத இந்தியர்கள் ஆதரவு - சர்வே தகவல்

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2016 (14:15 IST)
கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில், பிரதமர் மோடி அறிவித்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு இந்தியாவில் உள்ள 82 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக சர்வேயில் தெரியவந்துள்ளது.


 

 
மக்களிடம் புழக்கத்தில் இருந்து வந்த 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று, கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், தங்களிடம் உள்ள நோட்டுகளை வங்கியில் செலுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இதனால், தங்களிடம் உள்ள பணத்தை வங்கி கணக்கில் செலுத்தவும், ஏ.டி.எம்-ல் புதிய ரூபாய் நோட்டுகளை எடுக்கவும், மக்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்கள் முன்பு மக்கள் காத்துக் கிடக்கின்றனர்.
 
இந்நிலையில், மோடியின் அறிவிப்பிற்கு ஒரு பக்கம் பலர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு பக்கம் அவருக்கு ஆதரவும் பெருகி வருகிறது. இந்த அறிவிப்பால் கருப்புப் பணம் ஒழியும் என ஒரு சாரரும், இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு சாரரும் கருத்து கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில், பிரதமரின் இந்த முடிவு குறித்து மக்களின் மனநிலை என்னவென்று தெரிந்து கொள்ள, டெல்லியை சேர்ந்த இன்சார்ட் என்ற தகவல் பரிமாற்ற நிறுவனமும், ஐ.பி.எஸ்.ஓ.எஸ் என்ற மற்றொரு நிறுவனமும் ஒன்றாக சேர்ந்து ஒரு சர்வே (கணக்கெடுப்பு) நடத்தினர். இந்த சர்வே மொபைல் ஆப் மூலம் எடுக்கப்பட்டது.
 
இதில் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, கல்கத்தா, புனே, ஹைதராபாத், அகமதாபாத், சண்டிகர், லக்னோ போன்ற பெரிய நகரங்களில் நடத்தப்பட்டது. 
 
இந்த சர்வேயில் மொத்தம் 2,69,393 பேர் கலந்து கொண்டனர். அதில் 82 சதவீதம் பேர் மோடியின் அறிவிப்பிற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த முயற்சி கருப்புப் பணத்தை அழிக்கும் என அவர்கள் கருத்துக் கூறியுள்ளனர். ஆனால், ஏ.டி.எம் மையங்களில் ரூ.2,500 மட்டுமே எடுக்க முடியும் என்ற அறிவிப்பிற்கு 52 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments