Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புஷ்பா 2 முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அறிவித்த படக்குழு!

புஷ்பா 2 முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அறிவித்த படக்குழு!

vinoth

, வியாழன், 25 ஏப்ரல் 2024 (08:14 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் பாகத்தை சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்று மே மாதம் 1 ஆம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்துக்காக வைத்திருந்த டைட்டிலை எங்களுக்குக் கொடுத்தார்… முருகதாஸுக்கு அருண் விஜய் நன்றி!