Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புஷ்பா 2 படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பை வைத்து கல்லா கட்டும் தயாரிப்பு நிறுவனம்!

புஷ்பா 2 படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பை வைத்து கல்லா கட்டும் தயாரிப்பு நிறுவனம்!

vinoth

, வெள்ளி, 12 ஏப்ரல் 2024 (07:51 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் பாகத்தை சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்போது புஷ்பா 2 படத்தின் பிஸ்னஸை தொடங்கியுள்ளதாம் தயாரிப்பு நிறுவனம். இந்த படத்தின் மலையாள வெளியீட்டு உரிமைக்கு 20 கோடி ரூபாய் விலை நிர்ணயித்துள்ளதாம். புஷ்பா முதல் பாகம் வெறும் 2 கோடி ரூபாய்க்கு மட்டுமே கேரளாவில் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயன் & சிபி சக்ரவர்த்தி இணையும் படத்தின் தயாரிப்பாளர் இவரா?