Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புஷ்பா 2 படத்தில் இணைந்த ஆஸ்கர் வின்னர்… படக்குழு வெளியிட்ட புகைப்படம்!

புஷ்பா 2 படத்தில் இணைந்த ஆஸ்கர் வின்னர்… படக்குழு வெளியிட்ட புகைப்படம்!

vinoth

, திங்கள், 8 ஏப்ரல் 2024 (11:06 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தியா முழுவதும் ஒரு பிராண்ட்டாக மாறியது புஷ்பா 2 திரைப்படம். இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் படப்பிடிப்பு பல வெளிநாடுகளில் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் பாகத்தை சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை இந்த படத்தின் டீசர் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் புக்குட்டி ஒலி வடிவமைப்பாளராக இணந்துள்ளார். படத்துக்காக இவர் சவுண்ட் மிக்ஸிங் செய்யும் புகைப்படத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தளபதி படத்துக்குப் பிறகு ரஜினிக்கு ஜோடியாகும் ஷோபனா… தலைவர் 171 லேட்டஸ்ட் அப்டேட்!