Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பவண் கல்யான் நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமான அர்ஜுன் தாஸ்!

பவண் கல்யான் நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமான அர்ஜுன் தாஸ்!
, திங்கள், 12 ஜூன் 2023 (15:21 IST)
கைதி படத்தில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், அதன் பின்னர் மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு இவர் நடித்த அந்தகாரம் திரைப்படமும் நல்ல கவனத்தைப் பெற்றது. சமீபத்தில் ரிலீஸான விக்ரம் படத்தில் கூட அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். தற்போது வசந்தபாலன் இயக்கும் ‘அநீதி’படத்தில் கதாநாயகனாகவும் நடித்து முடித்துள்ளார்.

இதற்கிடையில் இப்போது அர்ஜுன் தாஸ் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார். அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது அர்ஜுன் தாஸ், தெலுங்கில் பவண் கல்யாண் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சாஹோ படத்தின் இயக்குனர் சஜித் இயக்கும் ஓஜி படத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்க உள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படம் ரிலீஸாகி ஒரு ஷோ ஓடிவிட்டாலே வெற்றிவிழாதான்… இயக்குனர் சுந்தர் சி பேச்சு!