Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுந்தர் சி நடிக்கும் தலைநகரம் 2… வெளியானது டிரைலர்!

சுந்தர் சி நடிக்கும் தலைநகரம் 2… வெளியானது டிரைலர்!
, திங்கள், 12 ஜூன் 2023 (09:18 IST)
இயக்குனராக பல வெற்றிப்படங்களைக் கொடுத்த சுந்தர் சி, நடிகர் அவதாரம் எடுத்த முதல் படமாக  2006 ஆம் ஆண்டு தலைநகரம் வெளியானது. வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் மிகப்பெரிய ப்ளஸ் பாய்ண்ட்டாக இந்த படத்துக்கு அமைய படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து சுந்தர் சி வரிசையாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் படங்கள் தோல்வி அடையவே மீண்டும் இயக்குனரானார். இப்போது அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைவதால் நடிப்பு, இயக்கம் என பயணித்து வருகிறார். இந்நிலையில் இப்போது தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் வி இசட் துரை இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.

கடந்த ஆண்டே இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில் இப்போது படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளதாக் டிரைலரைப் பார்க்கும் போது தெரிகிறது.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலையாளத்தில் படம் இயக்க பேச்சுவார்த்தை நடத்தும் கௌதம் மேனன்!... ஹீரோ யார்?