ரோகித் சதத்தால் தப்பிய இந்தியா 274 ரன்கள் குவிப்பு

செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (20:57 IST)
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 274 ரன்கள் குவித்தது.  

 
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இன்று 5வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
 
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 274 ரன்கள் குவித்தது. 
 
தொடர்ந்து 4 ஒருநாள் போட்டியில் சொதப்பிய ரோகித் சர்மா இன்று சதம் விளாசி அசத்தினார். ரோகித் சர்மா 115 ரன்கள் எடுத்த நிலையில் மைதானத்தில் விட்டு வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஷிரியாஸ் ஐயர் மற்றும் புவனேஷ்வர் குமார் அணியை 250 ரன்கள் கடக்க சற்று உதவினர்.
 
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி 275 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது. இந்திய அணி இந்த போட்டியில் வெற்றிப்பெற்றால் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING