எந்தெந்த முதல்வர்களுக்கு எவ்வளவு சொத்துக்கள்: பட்டியல் வெளியானது

திங்கள், 12 பிப்ரவரி 2018 (23:45 IST)
இந்தியாவில் உள்ள மாநிலங்களின் முதல்வர்களின் சொத்துப்பட்டியலை ஜனநாயக சீர்திருத்த சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 12வது இடம் கிடைத்துள்ளது. இந்த சொத்துப்பட்டியலில் முதல் ஐந்து பணக்கார முதல்வர்கள் யார் யார் என்பதை தற்போது பார்க்கலாம்

1. ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.177 கோடி சொத்து மதிப்பு
2. அருணாச்சலப்பிரதேச முதல்வர் பீம கந்துக்கு ரூ.129.57 கோடி சொத்து மதிப்பு உள்ளது.
3. பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் - ரூ.48.31 கோடி சொத்து மதிப்பு
4. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் - (ரூ.15.15 கோடி சொத்து மதிப்பு
5. மேகாலயா முதல்வர் முகுல் சங்மா (ரூ.14.50 கோடி) சொத்து மதிப்பு

மேலும் இந்தியாவில் உள்ள 31 மாநில முதல்வர்களில் 25 முதல்வர்கள் ரூ.1 கோடிக்கு மேல் அதிக சொத்து மதிப்பு பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.7.80 கோடி சொத்து மதிப்புடன் 12வது இடத்தில் உள்ளார்.

மேலும் இந்தியாவில் உள்ள முதல்வர்களில் குறைவான சொத்து மதிப்பை உடையவர்களின் பட்டியலில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பெயர் உள்ளது. மேலும்  5 பாஜக முதல்வர்கள், 2 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனதா தளம் (ஒற்றுமை) ஆகிய கட்சி முதல்வர்கள் கடைசி இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING