பொங்கலை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையின் நேரம் நீட்டிப்பு

வியாழன், 11 ஜனவரி 2018 (04:01 IST)
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வரும் நிலையில் இன்று இந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை நகர மக்களுக்கு இந்த இக்கட்டான நிலையில் கைகொடுப்பது மின்சார ரயில்களும், மெட்ரோ ரயில்களும் தான். மேலும் வரும் பொங்கல் தினத்தில் வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாகவும், உள்ளூர் மக்களின் வசதிக்காகவும் மெட்ரோ ரயில் இரவு 11.30 மணி வரை மெட்ரோ ரயில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதுவரை இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்த மெட்ரோ சேவை பொங்கலை முன்னிட்டு நான்கு நாட்கள் மட்டும் அதாவது ஜனவரி 11, 12, 13 மற்றும் 16 ஆகிய நாட்களில் கூடுதலாக இரவில் ஒன்றரை மணி நேரம் அதாவது இரவு 11.30 மணி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை நேரு பார்க்கிலிருந்து விமான நிலையம் வரையிலும், சின்னமலையிலிருந்து விமான நிலையம் வரையிலும், ஷெனாய் நகரிலிருந்து ஜெயிண்ட் தாமஸ் மவுண்ட் வரையிலும், இந்த செயல்படும் என்றும் இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும் மெட்ரோ ரயில்வெ நிர்வாகம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING