சென்னையில் தற்காலிக ஓட்டுனர் திடீர் கைது!

திங்கள், 8 ஜனவரி 2018 (23:42 IST)
இருசக்கர வாகன ஓட்டி மீது விபத்து ஏற்படுத்திய தற்காலிக டிரைவர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஐந்து நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வது வருவதை அடுத்து தற்காலிக ஓட்டுனர்கள் தினக்கூலி அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பிராட்வே-கண்ணகி நகர் செல்லும் பேருந்தை பாலகிருஷ்ணன் என்ற தற்காலிக ஓட்டுநர் ஓட்டிச் சென்றார்.

இவர் ஓட்டிச்சென்ற பேருந்து எதிர்பாராத விதமாக எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகன ஓட்டி பரிதாபமாக பலியானர்.  பலியானவர் அஜித்குமார் என்ற 18 வயது இளைஞர் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தற்காலிக ஓட்டுனர் பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அவர், தனது லைசென்ஸை மாநகரப் போக்குவரத்து அதிகாரிகளிடம் அளித்து தற்காலிக ஓட்டுநராக பணியாற்றத் தொடங்கினார். போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாவதை இனியேனும் தடுக்கும் வகையில் இருதரப்பினர்களும் கூடி பேசி வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING