Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிச்சன் பொருட்களை பாதுகாக்க உதவும் சில குறிப்புக்கள் !!

Kitchen Tips
, செவ்வாய், 18 அக்டோபர் 2022 (10:59 IST)
பன்னீரை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்கவும். இது பன்னீர் புளிப்பு அல்லது கசப்பாக மாறுவதைத் தடுக்கும், மேலும் மென்மையாகவும் இருக்கும்.


மழைக்காலத்தில் ஊறுகாய் சீக்கிரம் கெட்டுவிடும். எனவே, அவற்றை ஒரு கண்ணாடி ஜாரில் சேமித்து, அவற்றின் மேலே எப்போதும் எண்ணெய் அடுக்கு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது ஊறுகாய் கெட்டுப் போவதைத் தடுக்கும்.

லைட்டர் வாங்கிய ஒரு சில மாதங்களிலேயே  சரியாக எரியாமல் ரிப்பேர் ஆகிவிடும். இதற்கு லைட்டரை பற்ற வைத்தால் நெருப்பு வரக்கூடிய இடத்தில் இருக்கும் அழுக்கை காது குடையும் பட்ஸை வைத்து எண்ணெய் பிசுக்கை நீக்கி விட்டால், லைட்டர் சூப்பரா வேலை செய்யும்.

கண்ணாடி பாட்டிலுக்கு உள்ளே சுத்தம் செய்வது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. பாட்டிலுக்கு உள்ளே கை போகாது. எனவே, நீங்கள் பாட்டிலுக்கு உள்ளே கொஞ்சமாக பேஸ்ட்டை போட்டு சுடு தண்ணீரை ஊற்றி இரண்டு முறை குளிக்கி கீழே ஊற்றினால் அதன் பிசுபிசுப்பு நிறைந்த எண்ணெய் பாட்டில் ஒரு நொடி பொழுதில் சுத்தமாகிவிடும்.

சர்க்கரை வைத்திருக்கும் ஜாடியில் 2-3 கிராம்புகளை வைக்கவும். கிராம்புகளின் வாசனையினால் எறும்புகள் கிட்ட வரவே வராது.

வீட்டில் பாத்ரூமில் இருக்கும் கண்ணாடி, டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி, மூக்கு கண்ணாடி, என்று எல்லா கண்ணாடியையும் பளிச்சென்னை துடைப்பதற்கு, உங்கள் வீட்டில் இருக்கும் சேனிடைசர் துணியில தொட்டு கண்ணாடியை துடைத்து பாருங்க. கண்ணாடி ப்ளீச் என்று மாறிவிடும்.

Edited by Sasikala

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 1,542 பாதிப்புகள்; 8 பேர் பலி! – இந்திய கொரோனா நிலவரம்!