Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திடீரெனெ இந்த வார ரிலீஸில் புகுந்த யோகி பாபுவின் குய்கோ!

திடீரெனெ இந்த வார ரிலீஸில் புகுந்த யோகி பாபுவின் குய்கோ!
, செவ்வாய், 21 நவம்பர் 2023 (07:35 IST)
யோகி  பாபு, விதார்த், இளவரசு, ஸ்ரீபிரியங்கா, முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கும் குய்கோ படத்தை பத்திரிக்கையாளர் அருள்செழியன் இயக்கியுள்ளார். படத்துக்கு அந்தோனிதாசன் இசையமைத்துள்ளார்.

வெளிநாட்டில் வேலை செய்யும் மகன் தன் தாயின் இறப்புக்காக வருகையில், தன் தாயின் உடலை கெட்டுபோகாமல் பதப்படுத்தி வைத்திருந்த பிரீஸர் பெட்டியை கவனமாக பார்த்துக்கொள்ள, அது ஒரு கட்டத்தில் காணாமல் போகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை என இயக்குனர் கூறியுள்ளார்.

இந்நிலையில் திடீரென இப்போது இந்த வார ரிலீஸில் குய்கோ திரைப்படமும் இணைந்துள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதே நாளில் விக்ரம்மின் துருவ நட்சத்திரம் மற்றும் சந்தானத்தின் ‘80ஸ் பில்டப்’ ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'தல 'தோனியை சந்தித்த தளபதி விஜய்?..வைரலாகும் போட்டோ