Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை இயக்குகிறாரா அட்லி?

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை இயக்குகிறாரா அட்லி?
, வியாழன், 16 நவம்பர் 2023 (14:40 IST)
ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என தான் இயக்கிய அனைத்து படங்களையும் ஹிட்டாக கொடுத்த இயக்குனர் அட்லி, அதையடுத்து பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினர.

3 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி 1100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் அட்லி அடுத்து யாரை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் மற்றும் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக சொல்லப்படும் நிலையில் ரஜினிக்கு 3 கதைகளை தான் சொல்லியுள்ளதாக அட்லி கூறியுள்ளார்.

ஆனால் அந்த படம் சரியான நேரத்தில் அமையவேண்டும் எனவும், பாட்ஷாவை விட ரஜினியை மாஸாக காண்பிக்க ஆசைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தை முதன் முதலில் சந்தித்தபோது என்னை கிண்டல் செய்தார்… அட்லி பகிர்ந்த தகவல்!