Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் ஒரு பேய் காமெடி படத்தில் சந்தானம்… எப்படி இருக்கு டிடி ரிட்டர்ன்ஸ் டிரைலர்!

மீண்டும் ஒரு பேய் காமெடி படத்தில் சந்தானம்… எப்படி இருக்கு டிடி ரிட்டர்ன்ஸ் டிரைலர்!
, வெள்ளி, 14 ஜூலை 2023 (16:02 IST)
நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘தில்லுக்கு துட்டு‘ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மெகாஹிட் ஆனது. அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகமும் வெளியாகி கலவையான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றது. சந்தானம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியதன் பின்னர் அவருக்குக் கைகொடுத்த ஒரு சில படங்களில் தில்லுக்கு துட்டு படமும் ஒன்றாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இதன் அடுத்த பாகமான டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் டிரைலர் இப்போது ரிலீஸ் ஆகியுள்ளது. பேய்கள் நடத்தும் ஒரு கேம் ஷோவில் கலந்துகொண்டு சந்தானம் & கோ படும் அவஸ்தைகளை ஜாலியாக சொல்லும் காட்சிகளைக் கொண்டுள்ளது டிரைலர். ஆனால் பேய் மற்றும் மாளிகை சம்மந்தப்பட்ட காட்சிகளின் கிராபிக்ஸ் காட்சிகள் சீரியல் தரத்தில் உள்ளன.

வழக்கம்போல சந்தானம் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லே தங்களுடைய ஒன்லைனர்களால் கவர்கின்றனர். இந்த திரைப்படம் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நம்ம அடிவாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும்… இசையமைப்பாளர் டி இமானின் டிவீட்!