Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று வெளியாகிறது சந்தானத்தின் தில்லுக்கு துட்டு ரிட்டர்ன்ஸ் அப்டேட்!

இன்று வெளியாகிறது சந்தானத்தின் தில்லுக்கு துட்டு ரிட்டர்ன்ஸ் அப்டேட்!
, வியாழன், 13 ஜூலை 2023 (08:35 IST)
நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘தில்லுக்கு துட்டு‘ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மெகாஹிட் ஆனது. அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகமும் வெளியாகி கலவையான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றது. சந்தானம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியதன் பின்னர் அவருக்குக் கைகொடுத்த ஒரு சில படங்களில் தில்லுக்கு துட்டு படமும் ஒன்றாக அமைந்துள்ளது.

இந்நிலையில் இதன் அடுத்த பாகமான 'தில்லுக்கு துட்டு 3'-ஐ 3டியில் எடுக்க நடிகர் சந்தானம் முடிவு செய்துள்ளார். ஆனால் இந்த படத்தை முதல் இரண்டு பாகங்களை இயக்கிய ராம்பாலா இயக்கவில்லை. அவருக்கு பதிலாக ராம்பாலாவின் இணை இயக்குனர் பிரேம் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கு ‘DD ரிட்டர்ன்ஸ்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என சந்தானம் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டைரி பட இயக்குனரின் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ்!