Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபுதேவா - ஹன்சிகா படத்தின் அப்டேட்ஸ்...

பிரபுதேவா - ஹன்சிகா படத்தின் அப்டேட்ஸ்...
, சனி, 6 ஜனவரி 2018 (16:45 IST)
பிரபுதேவா - ஹன்சிகா நடித்துள்ள ‘குலேபகாவலி’ படத்தைப் பற்றிய லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது. பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குலேபகாவலி’. இந்தப் படத்தில் பிரபுதேவா ஜோடியாக ஹன்சிகா நடிக்க, ரேவதி, ஆனந்தராஜ், ராமதாஸ், சத்யன், மொட்டை ராஜேந்திரன், யோகிபாபு, அம்பானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.
 
வருகிற பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தின் சென்னை விநியோக உரிமையை எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனமும், செங்கல்பட்டு விநியோக உரிமையை சி.எஸ்.பதம்சந்தும் பெற்றுள்ளனர். மதுரை விநியோக உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் நிறுவனமும், சேலம் விநியோக உரிமையை 7ஜி சிவாவும் பெற்றுள்ளனர்.
 
திருநெல்வேலி - கன்னியாகுமரி விநியோக உரிமையை மணிகண்டனும், திருச்சி - தஞ்சாவூர் விநியோக உரிமையை காமதேனு பிக்சர்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளனர். மீதமுள்ள இடங்களிலும் பெரிய விநியோக நிறுவனங்கள் வாங்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ - கலக்கல் டீசர் வீடியோ