Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குனர் காக்கா முட்டை மணிகண்டன் வீட்டில் நடந்த கொள்ளை…!

இயக்குனர் காக்கா முட்டை மணிகண்டன் வீட்டில் நடந்த கொள்ளை…!

vinoth

, வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (15:06 IST)
இயக்குனர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை மற்றும் குற்றமே தண்டனை ஆகிய படங்கள் மிகப்பெரிய அங்கிகாரத்தை அவருக்கு பெற்றுத் தந்தன. ஆண்டவன் கட்டளை படத்துக்குப் பிறகு 3 ஆண்டு இடைவெளியில் கடைசி விவசாயி படத்தை இயக்கி இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்டார். அந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக இருவரும் ஒரு படைப்புக்காக இணைந்துள்ளனர்.  ஆனால் இந்த முறை ஒரு படத்துக்காக அல்ல, வெப் சீரிஸ்க்காக. தமிழில் விஜய் சேதுபதி நடிக்கும் முதல் வெப் தொடராக உருவாகி வருகிறது. இந்த தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார். இந்த தொடரின் பணிகளுக்காக மணிகண்டன் கடந்த சில மாதங்களாக சென்னையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மதுரையில் உள்ள மணிகண்டனின் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இதில் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறிவு என்னை பிளாக் செய்துவிட்டார்… இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தகவல்!