Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்திற்கு டி.இமான் இசையமைப்பது குறித்து அனிருத் என்ன சொல்லிருக்கார்னு தெரியுமா?

அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்திற்கு டி.இமான் இசையமைப்பது குறித்து அனிருத் என்ன சொல்லிருக்கார்னு தெரியுமா?
, வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (18:01 IST)
அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்திற்கு டி.இமான் இசையமைப்பது குறித்து தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார் அனிருத்.

 
அஜித்தை வைத்து சிவா இயக்கும் நான்காவது படம் ‘விஸ்வாசம்’. இதற்கு முன் ரிலீஸான 3 படங்களில், ‘வேதாளம்’ மற்றும் ‘விவேகம்’ படங்களுக்கு அனிருத் இசையமைத்தார். எனவே, ‘விஸ்வாசம்’ படத்துக்கும் அவர்தான் இசையமைப்பார் என்று கூறப்பட்டது. 
 
ஆனால், யுவன் சங்கர் ராஜா, சாம் சி.எஸ். என பல பெயர்கள் அடிபட்டன. அதன்பிறகும் அனிருத் தான் இசையமைக்கப் போகிறார் எனத் தகவல் வெளியானது. ஆனால், படத்தைத் தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம், டி.இமான் இசையமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
 
இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார் அனிருத். “எங்களுடைய தல படத்திற்கு இசையமைப்பதற்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார் அனிருத்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆரம்பிச்சிட்டாங்கோ...கண்டிப்பா இந்த படமும் ஹிட்தான்....