விசுவாசம் படத்தில் தல அஜித் முதன்முதலாக எடுக்கும் முயற்சி

செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (17:26 IST)
தல அஜித் நான்காவது முறையாக இயக்குனர் சிவா இயக்கத்தில் விசுவாசம்' என்ற படத்தில் நடிக்கவுள்ளார் அல்லவா! இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் முதல்முறையாக அஜித் ஒரு பாடலை பாடவுள்ளாராம்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், பெரும் யோசனைக்கு பின்னர் தல அஜித் பாட ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

அஜித், நயன்தாரா உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING