Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்கரன் திரைப்பட இசை வெளியீட்டு விழா..!

அக்கரன் திரைப்பட இசை வெளியீட்டு விழா..!

J.Durai

, செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (08:50 IST)
குன்றம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர்  அருண் K பிரசாத் இயக்கத்தில், எம் எஸ் பாஸ்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க,  மாறுபட்ட களத்தில் வித்தியாசமான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் "அக்கரன்".  விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா,  நடைபெற்றது. 
 
இந்நிகழ்வினில்
 
நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசியதாவது.. 
 
இப்படத்தைத் தயாரித்திருக்கும்  கார்த்திகேயனுக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் என் வாழ்த்துக்கள்.   ஹரி இசையில் பாடல்கள் அட்டகாசமாக இருக்கிறது.சரவெடி சரவணன் மாஸ்டர் ரொம்ப ஈஸியாக சொல்லிக்கொடுத்து ஆக்சன் காட்சிகளை எடுத்து விடுவார் ஆக்சன் காட்சிகள் நன்றாக வந்துள்ளது. இந்தப்படத்திற்கு என் அக்கா மகன் மது வந்து, என் நண்பர் அருண் ஒரு படம் செய்கிறார் நீங்க தான் லீட் கேரக்டர் செய்யனும் என்றார். சரிப்பா கதை கேட்கிறேன் என்றேன். பார்க்கிங் மாதிரி நாயகனுக்கும் எனக்குமான கதையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் கதை படு வில்லங்கமாக இருந்தது. இயக்குநரிடம் வேறு ஹீரோ நடிக்கலாமே என்றேன், ஆனால் அந்த வயது, நடிப்புக்கு நீங்கள் தான் சரியாக இருப்பீர்கள் எனச் சொல்லிச் சம்மதிக்க வைத்தார். எல்லோருடைய முயற்சியால், மிக அழகாகக் கோர்த்து, இந்தப்படத்தை எடுத்துள்ளார்கள். மகள்கள் என்றாலே நான் உருகிவிடுவேன், வெண்பாவும், பிரியதர்ஷினியும்  என் மகள்களாக அருமையாக நடித்துள்ளார்கள். ஷூட்டிங் ரொம்ப ஜாலியாக, மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. மண் புழு கூட மிதித்தால் திரும்பக் கடிக்க வரும் அது போல் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரின் கதை என்றார் இயக்குநர், அந்த வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்தது. படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நல்ல படம் ஆதரவு தாருங்கள் நன்றி. 
 
தயாரிப்பாளர் கார்த்திகேயன் பேசியதாவது.. 
 
நான் சினிமாவிற்கு மிகவும் புதிது. என் நண்பர்கள் மூலம் தான் இந்த கதை வந்தது. எனக்கு சினிமா செய்யும் ஐடியா எதுவும் இல்லை. கார்த்திக்,கருப்பசாமி எனத்  திருப்பரங்குன்றம் நண்பர்கள் இணைந்து எல்லோரும் பேசினோம் உடனே குன்றம் புரடக்சன்ஸ் எனப் பெயர் வைத்தோம். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். படம் நன்றாக வந்துள்ளது படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 
 
இயக்குநர் அருண் K பிரசாத் பேசியதாவது.. 
 
நண்பர் கருப்பசாமி மூலமாகத் தான் எம் எஸ் பாஸ்கரைத் தெரியும், அவர் பெயர் சொன்னவுடனே தயாரிப்பாளர் ஆபிஸ் போட்டுத் தந்து விட்டார்.  இருவருக்கும் நன்றிகள்  இப்படத்தில் கேமராமேன்  ஆனந்த் மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார். படத்தில் எம் எஸ் பாஸ்கர் அப்பா அட்டகாசமாக நடித்துள்ளார், இப்படம் புதுமையாக இருக்கும். இப்படத்தில் உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 
 
இசையமைப்பாளர் ஹரி பேசியதாவது.. 
 
எங்களை ஆதரித்துப் பாராட்ட வந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள். எம் எஸ் பாஸ்கர் மாதிரி ஆளுமையின் படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. கார்த்திகேயன் சார், கருப்புசாமி சார், இயக்குநர் என எல்லோருக்கும் நன்றிகள். அக்கரன் படத்தில் எங்களுக்குச் சவாலாக இருந்தது. எம் எஸ் பாஸ்கர் சாருக்கு டைட்டில் சாங் செய்தது தான். அதை முதன்முறையாகச் செய்தது நாங்கள் தான் என்பது பெருமை. எம் எஸ் பாஸ்கர் சார் இதுவரை பார்க்காத பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் என்னுடன் இசையில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு நன்றி. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆதரவும் எங்களுக்குத் தேவை. அனைவருக்கும் நன்றி.
 
நடிகை வெண்பா பேசியதாவது.. 
 
இந்தப் படம் எனக்கு மிக முக்கியமான படம்,  இந்த படத்தின் ஆடிசன் சென்றபோது, இயக்குநர் இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் இருக்கிறது உங்களுக்கு ஓகே என்றால் எனக்கு ஒகே என்றார். எனக்குக் கதை மிகவும் பிடித்திருந்தது, நான் இதுவரை லவ், செண்டிமெண்ட் மாதிரியான படங்கள் மட்டுமே செய்து இருக்கிறேன். இந்தப் படம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தயாரிப்பாளர் கார்த்திகேயன் சார் சினிமா தனக்கு புதுசு என்றார், ஆனால் இந்த மாதிரியான கதையை எடுத்து, தயாரித்து, எங்கள் மாதிரியானவர்களுக்கு வாய்ப்பு தருவது பெரிய விஷயம் சார் நன்றி.  எம் எஸ் பாஸ்கர் சார் நடிப்பிற்கு எல்லோருமே ரசிகர்கள் தான் நானும் அதில் ஒருத்தி. அவருக்கு மகளாக நடிக்கிறேன் என்றபோது நெர்வஸாக இருந்தது, எங்களுடன் எளிமையாகப் பழகி அழகாகச் சொல்லித்தந்தார். அவருடன் நடித்த அனுபவம் மிக மகிழ்ச்சியாக இருந்தது. ஒளிப்பதிவு, எடிட்டிங்க், இசை எல்லாம் நன்றாக வந்துள்ளது. நல்ல படம்  அனைவரும் ஆதரவு தாருங்கள். 
 
நடிகை பிரியதர்ஷினி  பேசியதாவது.. 
 
ஜீவன் மணி எனும் இயக்குநர் என்னை வைத்து ஷார்ட் ஃபிலிம் எடுத்தார் அதன் மூலம் தான் இந்த வாய்ப்பு வந்ததது. தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். படம் அட்டகாசமாக வந்திருக்கிறது. எல்லோரும் திரையரங்கில் பார்த்து படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
 
நடிகர் ஆகாஷ் பிரேம்குமார் பேசியதாவது.. 
 
ஒளிப்பதிவாளர் ஆனந்த் அண்ணா மூலம் மூலமாகத் தான் இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது இதற்கு முன் பாலா சாரின் வர்மா படத்தில் நான் நடித்திருந்தேன் ஆனால் அந்த படம் தியேட்டரில் வெளியாகவில்லை, ஓடிடியில் தான் வெளியானது அதைப் பார்த்துவிட்டு இந்த பையனுக்கு ஒரு நல்ல வாய்ப்பை தர வேண்டும் என ஆனந்த் அண்ணா எனக்கு இந்த வாய்ப்பை வாங்கித் தந்தார்.கதையை நம்பி ஒருமுயற்சியாக இந்தப்படத்தைச் சின்ன பட்ஜெட்டில் எல்லோரும் உழைத்து இப்படத்தை எடுத்துள்ளோம். இது போன்ற படத்தை தயாரிக்க முன்வந்த கார்த்திகேயன் சாருக்கு என் நன்றிகள், எம் எஸ் பாஸ்கர் சார் மாதிரி பெரிய நடிகர்கள் கூட நடிக்கும் போது தான், நாம் பயணிக்க வேண்டிய தூரம் தெரியும். அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன் நன்றி. உடன் நடித்த அனைவருக்கும் நன்றி. ஹரி மிகச்சிறந்த இசையைத் தந்துள்ளார். சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படங்களை ஆதரிக்க வேண்டும். படம் பார்த்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் நன்றி.   
 
நடிகர் விஸ்வநாத் பேசியதாவது  
 
அட்டகத்தி முதல் இப்போது வரை ஆதரவு தந்து வரும் அனைவருக்கும் என் நன்றிகள்.  ஒளிப்பதிவாளர் ஆனந்த் சார் மூலம் தான் எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் நிறைய பேருக்கு வாய்ப்பு வாங்கி தந்துள்ளது எனக்கு தெரிகிறது. நன்றி. எம் எஸ் பாஸ்கர் எந்தப்படத்தில் நடித்தாலும் அவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து விடுவார். அதே போல் உடன் நடிப்பவர்களுக்கு நல்ல ஸ்பேஸ் தருவார். கபாலி படத்தில் நடித்தபோது ரஜினி சார் உடன் நடிப்பவர்களை கூப்பிட்டு தனித்தனியாகப் பாராட்டுவார். அதே போல் எம் எஸ் பாஸ்கர் சாரும் எல்லோரையும் பாராட்டினார். உங்களுடன் நடித்தது மகிழ்ச்சி சார். இப்படத்தில் எல்லோருமே கடினமாக உழைத்துள்ளனர். ஹரி சார் மியூசிக்கில் பாடல்கள் நன்றாக வந்துள்ளது.  எல்லோருக்கும் நன்றி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீப்பிள் மீடியா ஃபேக்டரி இணையும் “புரடக்சன் நம்பர் 36”, சூப்பர் யோதா படத்தின் தலைப்பு அறிவிப்பு ஏப்ரல் 18 அன்று வெளியாகிறது !!