Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆதிக் படத்துக்குப் பிறகு சினிமாவுக்கு பிரேக் விடும் அஜித்.. பைக் சுற்றுலாவை தொடர திட்டம்!

ஆதிக் படத்துக்குப் பிறகு சினிமாவுக்கு பிரேக் விடும் அஜித்.. பைக் சுற்றுலாவை தொடர திட்டம்!

vinoth

, திங்கள், 18 மார்ச் 2024 (14:09 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து  வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில்  கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டைட்டில் ‘குட் பேட் அக்லி’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை முடித்ததும் அஜித் ஏற்கனவே ஆரம்பித்து கிடப்பில் போட்டிருந்த தன்னுடைய உலக பைக் சுற்றுலாவை முடிக்க திட்டமிட்டுள்ளாராம். அதனால் சினிமாவுக்கு ஒரு தற்காலிக இடைவெளி விட உள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நானும் பப்லுவும் திருமணம் செய்துகொள்ளவில்லை… ப்ரேக் அப் பற்றி மனம் திறந்த ஷீத்தல்!