Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வரலாறு படத்துக்குப் பிறகு குட் பேட் அக்லியில் மூன்று வேடத்தில் நடிக்கிறாரா அஜித்?

வரலாறு படத்துக்குப் பிறகு குட் பேட் அக்லியில் மூன்று வேடத்தில் நடிக்கிறாரா அஜித்?

vinoth

, சனி, 16 மார்ச் 2024 (07:27 IST)
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து  வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில்  கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும்  இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் சில மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு ‘குட் பேட் அக்லி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நேற்று முன்தினம் இந்த படத்தின் டைட்டில் ‘குட் பேட் அக்லி’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் தலைப்பு 60 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இத்தாலிய மற்றும் ஹாலிவுட் கூட்டு படைப்பான ‘குட் பேட் அக்லி’ என்ற தலைப்பில் இருந்து உருவாகியுள்ளது. அந்த படத்தில் மூன்று விதமான குணாதிசயம் கொண்ட கதாபாத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்போது அதே தலைப்பை அஜித் படத்துக்கு வைத்துள்ள நிலையில் மூன்று வேடங்களில் அஜித் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆடு ஜீவிதம் படத்துக்காக நான்கு மொழிகளில் டப்பிங் பேசிய பிரித்விராஜ்!