Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று கமலின் ‘ஆளவந்தான்’, ரஜினியின் ‘முத்து’ ரீரிலீஸ்.. வெற்றி யாருக்கு?

இன்று கமலின் ‘ஆளவந்தான்’, ரஜினியின் ‘முத்து’ ரீரிலீஸ்.. வெற்றி யாருக்கு?
, வெள்ளி, 8 டிசம்பர் 2023 (08:06 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படம் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படம் இன்று ரீரிலீஸ் ஆகிறது.

பொதுவாக ரஜினி கமல் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் இரு படங்களுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் நிலையில் இன்றும் அதே போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முத்து,. கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கடந்த 2001 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஆளவந்தான்.  இந்த படம் வெளியான போது எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும் தற்போது இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் இன்றைய இளைய தலைமுறையினர் இந்த படத்தை பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் மீண்டும் கமல்ஹாசன், ரஜினிகாந்த்   படங்கள் ஒரே நேரத்தில் ரீ ரிலீஸ் ஆவது இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென கார்த்தியை சந்தித்த இயக்குனர் ஹெச் வினோத்… அப்போ தீரன் 2 உறுதியா?