Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆடை சர்ச்சையில் சிக்கினார் சிந்து!

ஆடை சர்ச்சையில் சிக்கினார் சிந்து!

ஆடை சர்ச்சையில் சிக்கினார் சிந்து!
, சனி, 3 செப்டம்பர் 2016 (14:25 IST)
ரியோ ஒலிம்பிக்கில் இறகுப்பந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் சிந்து. இவர் ஒலிம்பிக்கில் பயன்படுத்திய ஆடை குறித்து தற்போது சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.



லி-நிங் என்ற நிறுவனம் இந்திய ஒலிம்பிக் கழகத்துடன் ரூ. 3 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை போட்டு ஒலிம்பிக்கிற்கான அதிகாரப்பூர்வமான ஸ்பான்ஸராக இருந்தது.

இந்நிலையில் சிந்து தான் விளையாடிய போட்டிகளின் போது லி-நிங் நிறுவனம் வழங்கிய ஆடையை அணியவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கான ஆதாரத்தை வெளியிட்டு புகார் தெரிவித்துள்ளது.

லி-நிங் நிறுவனத்தின் ஆடையின் நிறம் பிடிக்காததால் தான் சிந்து அதனை அணியவில்லை என கூறப்படுகிறது. தொடக்கத்தில் அந்த நிறுவனத்தின் ஆடைகளை அணிந்த சிந்து பின்னர் அதனை அணியவில்லை.

சிந்துவிற்கு மஞ்சள் மற்றும் சிகப்பு நிறங்கள் ராசியானது என்பதால் தான் அவர் பங்கேற்ற போட்டிகளில் லி-நிங் நிறுவன ஆடைகளை அணியவில்லை என்ற தகவலும் பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’எனது மிகப்பெரிய ஏமாற்ற இதுதான்’ - வருத்தப்படும் டி வில்லியர்ஸ்