Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’எனது மிகப்பெரிய ஏமாற்றம் இதுதான்’ - வருத்தப்படும் டி வில்லியர்ஸ்

’எனது மிகப்பெரிய ஏமாற்றம் இதுதான்’ - வருத்தப்படும் டி வில்லியர்ஸ்
, சனி, 3 செப்டம்பர் 2016 (03:07 IST)
2015 உலகக்கோப்பை அரையிறுதியில் நியூஸிலாந்திடம் அடைந்த தோல்வி தனது வாழ்நாளின் மிகப்பெரிய ஏமாற்றம் என்று ஏ.பி.டிவில்லியர்ஸ் தனது சுயசரிதை நூலில் நொந்து கொண்டுள்ளார்.
 

 
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடைபெற்ற உலக்கோப்பை போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.
 
2015 உலகக்கோப்பை தொடரின் ஆகச் சிறந்த போட்டியான இதில், போட்டி முடிவடைந்ததும் இம்ரான் தாஹிர், மோர்னோ மோர்கல், ஸ்டெய்ன் மற்றும் டி வில்லியர்ஸ் உள்ளிட்ட வீரர்கள் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதனர்.
 
அந்தத் தோல்வியினால் இருதயம் நொறுங்கி விட்டது என்று கூறியுள்ளார் ஏ.பி.டிவில்லியர்ஸ். அவர், எழுதி வெளியிடவுள்ள AB: The Autobiography என்ற சுயசரிதை நூலில் ஏ.பி.டிவில்லியர்ஸ் இது குறித்த நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.
 
தனது சுயசரிதையின் ’த ட்ரீம்’ என்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ள டிவில்லியர்ஸ், “காலிறுதியில் இலங்கையை வீழ்த்திய பிறகு அரையிறுதியில் நியூஸிலாந்துக்கு எதிராக அதே தென் ஆப்பிரிக்க அணிதான் களமிறங்கும் என்று உறுதியாக நம்பினேன்.
 
webdunia

 
ஆனால், அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக, எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது பிலாண்டர் உடற்தகுதி பெற்று விட்டார் என்றும் அவர் கெய்ல் அபோட்டுக்கு பதில் விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது” என தேர்வுக் குழுவினர் மீதான சந்தேகத்தை நாசூக்காக குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், போட்டியில் தோல்வி அடைந்ததும் தனது இதயம் நொறுங்கி விட்டதாக கூறியுள்ள டி வில்லியர்ஸ், தென் ஆப்பிரிக்க அணிக்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே தனக்குள் எரிந்து கொண்டிருக்கும் லட்சியம் என்று கூறியுள்ளார்.
 
இறுதியாக கூறியுள்ள டி வில்லியர்ஸ், ”புதிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. சிந்திக்கவும் எதுவும் புதிதாக இல்லை. தென் ஆப்பிரிக்கா அணி இனிமேல் இதுபோன்ற வேடிக்கையான வகையில் வெளியேறக் கூடாது. மேலும், ஐசிசி நடத்தும் உலக கோப்பையை தென் ஆப்ரிக்கா வெல்ல வேண்டும். இது ஒருநாள் நடந்தே தீரும்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’கிரிக்கெட் உலகில் சர்ச்சை’ – டெண்டுல்கரை தன் மனைவியுடன் ஒப்பிட்டு கிண்டல் செய்த சேவாக்