Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முருகனின் ஆண்டிக்கோலம் உணர்த்தும் தத்துவம்....!

முருகனின் ஆண்டிக்கோலம் உணர்த்தும் தத்துவம்....!
முருகனின் கோலங்களில் அறிவு மயமான வடிவம் ஆண்டிக்கோலம். இவ்வடிவத்தை வனங்கினால் நமக்கு நல்லறுவு கிடைக்கும். முருகன் தனது பலவிதமான கோலங்களில் அழகாக காட்சி தந்தாலும், அவரது ஆண்டிக்கோலத்தை (தண்டபாணி) வணங்கிட பெரும்பாலான  பக்தர்கள் யாரும் விரும்புவதில்லை.
இக்கோலத்தில் உள்ள முருகனை வணங்கினால் அவரைப்போல நாமும், பொருள், செல்வங்களை இழப்போம்  என நம்பிக்கை கொண்டுள்ளனர். இது தவறாகும். பழநியில் கூட முருகனை ராஜ அலங்கார கோலத்தில் காட்டுகின்றனர். 
 
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரரை வணங்கி விட்டு வெளியே வந்ததும் பிரகாரத்தில் இருக்கும் ஆண்டி முருகனை பார்க்காமலேயே சிலர்  சென்று விடுவர்.  இது தவறான செயல். தண்டபாணியின் இக்கோலம் மாயையான உலகில் இருக்கும் நாம் நமது ஆணவம், கர்வம் போன்றவற்றை துறந்து போலியில் பற்றின்றி வாழவேண்டும் என்பதையே உணர்த்துகிறது.
webdunia

மேலும், எத்தனை வேண்டுதல்களைச் செய்து எவ்வளவு செல்வங்களைப் பெற்றாலும்,  பிணமாய் எரியும் போது எப்படி நிர்வாணமாய் வந்தோமோ அப்படி நிர்வாணமாகவே இறைவனை அடைவோம் என்பதையே ஆண்டிக்கோலம் காட்டுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவனுக்கு உகந்த பிரதோஷ வழிபாடு...!