Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூஜை செய்யும்போது மணி அடித்து ஒலி எழுப்புவது ஏன்?

பூஜை செய்யும்போது மணி அடித்து ஒலி எழுப்புவது ஏன்?
கோவில்களில் பூஜை செய்யும் நேரத்தில் மணி அடித்து, ஒலி எழச் செய்வார்கள். சில கோவில்களில் பக்தர்கள் உள்ளே செல்லும்போதே மணி அடித்துவிட்டு, பிறகு இறைவனை வணங்குகின்றனர். எதற்காக மணி அடிக்கிறோம் தெரியுமா?
நாம் வீடு மற்றும் கோயில்களில் பூஜை காலங்களில் மணியை ஓங்கி அடித்து ஒலிக்கச் செய்யும்போது, கூடவே நாகஸ்வரம், மேளம், சங்கு போன்றவற்றையும் ஒலிக்கச் செய்கிறோம். வாத்தியங்கள் முழங்க பூஜை செய்வது என்பது மரபு. பூஜை செய்யும்போது, அதாவது, இறைவனுக்கு தீப தூப ஆரத்திகளை சமர்ப்பிக்கும்போது, நம் மனம் இறை இன்பத்தில் லயித்திருக்கவேண்டும். வெளி விவகாரங்கள் எதுவும் நம் மனத்தில் எழக்கூடாது. அதற்கு நாம் நம் ஐம்புலன்களில் ஒன்றான ஒலி உணரும் காதினை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். 
webdunia
அதாவது, பூஜை நேரங்களில் எவரேனும் ஒருவர், வேண்டாத பேச்சுகளைப் பேசலாம், அபசகுனமான வார்த்தைகளை வீசலாம், அல்லது யாரையேனும் கொடுஞ் சொற்களால் ஏசலாம். இவற்றைக் கேட்கும் ஒருவருக்கு, மனம் கட்டுப்பாடு இழந்து எங்கெங்கோ அலைபாயும். எனவே தான், பூஜை செய்யும்போது, இந்த விதமான சப்தங்களை அடக்கி ஒடுக்கும் பிரணவ ஒலியை ஒலிக்கச் செய்வது வழக்கமாக இருந்திருக்கிறது. நம் மனத் திட்பத்தை அதிகரிக்கச் செய்யும்  ஒன்றுதான் மணி அடித்தல் என்பதை உணர்வோம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காசியில் தினந்தோறும் செய்யப்படும் கங்கா ஆரத்தி