Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தண்ணீர் திறக்காவிடில் அலுவலகத்தை பூட்டுவோம் - வீடியோ

தண்ணீர் திறக்காவிடில் அலுவலகத்தை பூட்டுவோம் - வீடியோ
, வெள்ளி, 29 ஜூன் 2018 (17:00 IST)
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. 

 
இந்த கூட்டத்தில் கரூர், கடவூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி, மண்மங்கலம் உள்ளிட்ட 6 தாலுக்காக்களை சார்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
 
அமராவதி ஆற்று பாசன விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து, அமராவதி ஆற்றின் கடைமடை பகுதி வரை தண்ணீர் திறந்து விடவில்லை எனில், அடுத்து எனன் செய்வது என ஆலோசித்தனர்.  
 
அதன்பின் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் முறையிட்ட விவசாயிகள் தண்ணீர் திறக்காத பட்சத்தில், கடைமடை வரை ஆகஸ்ட் மாதம் விவசாயத்திற்கு தரவில்லை என்றால், அங்குள்ள அமராவதி ஆற்றின் வடிநில அதிகாரிகள் அலுவலகத்தை பூட்டுவோம் என்றும், அதிகாரிகளை சிறைபிடிப்போம் என்றும் எச்சரிக்கையையும் விடுத்தனர். 
 
இந்த சம்பவத்தினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
பேட்டி : ராமலிங்கம் – விவசாய சங்கம் – கரூர் 
-சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அசுரவதம்- திரை விமர்சனம்