Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தர்ப்பூசணி மூலம் தயாரிக்கப்படும் இயற்கை வயாகரா : இது புதுசு

தர்ப்பூசணி மூலம் தயாரிக்கப்படும் இயற்கை வயாகரா : இது புதுசு
, வெள்ளி, 29 ஜூன் 2018 (16:29 IST)
வீட்டிலேயே இயற்கை வயாகராவை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். 

 
கோடை காலத்தில் மட்டும் விற்பனைக்கு வரும் தர்பூசணியை பிடிக்காதவர்கள் யாரும் கிடையாது. நீர் சத்து அதிகமாக இருப்பதால், வெயிலில் தாகத்தை தணிக்க அனைவைரும் தர்பூசணியை விரும்பி சாப்பிடுகிறார்கள். 
 
சுவை மட்டுமின்றி அதில் பல மருத்துவ குணம் இருப்பது பலருக்கும் தெரியாது. தர்பூசணியில் பசலைக்கீரைக்குச் சமமான அளவு இரும்புச் சத்து,  வைட்டமின் சி, ஏ, பி6, பி1 ஆகியவை சத்துகள் அதிக அளவு உள்ளது. பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது பொருட்களும் உள்ளது. 
 
100 கிராம் தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 46 சதவீத கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் 7 சதவீதம் உள்ளது.  
 
இது போன்ற இன்னும் பல நன்மைகளுக்கு பயக்கும் தர்பூசணி ஒரு இயற்கை வயாகரா என்பது பலருக்கும் தெரியாது. தர்பூசணியில் உள்ள மேல் பகுதி, அதாவது வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உள்ளது. அதில் உள்ள பைடோ நியூட்ரியண்ட்ஸ் உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. 

தர்பூசணியில் உள்ள சிட்ரூலின் மற்றும் லைகோபீன் ஆகியவை, வயாகராவைப் போல் ரத்த நாளங்களை விரிவடையச் செய்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஆற்றல் உடையது.  
 
தற்போது, வீட்டிலேயே எளிமையான முறையில், இயற்கை வயாகராவை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம். 
 
முக்கியமாக, இந்த தயாரிப்பில், சக்கரை, உப்பு என எந்த வேதி பொருட்களும் சேர்க்கக் கூடாது. அப்படி சேர்த்தால், இந்த இயற்கை வயாகரா பலனளிக்காது. 
webdunia

 
தேவையான பொருள் : தர்பூசணி, எலுமிச்சை பழம் 
 
செய்முறை : தர்பூசணியை அதன் வெண்மை பகுதியையும் சேர்த்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி, நாம் வழக்கமாக ஜூஸ் போடும் ஜாரில் போட்டு, நன்றாக கூழாக்கிக் கொள்ள வேண்டும். குறைந்தது அதன் அளவு ஒரு லிட்டர் அளவு இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும். 
 
அதன்பின் அந்த ஜூஸை ஒரு பாத்திரத்தில் கொட்டி, அடுப்பில் வைத்து சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அதன்பின் எலுமிச்சைப் பழச்சாறை அதில் பிழிந்து, நன்றாக கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.  
 
தர்பூசணியில் நீர் அதிகமாக இருப்பதால், பாத்திரத்தில் உள்ள அளவில் ஏறக்குறைய பாதிஅளவு நீர் ஆவியாகும் வரை அதை கொதிக்க வைக்க வேண்டும்.  
 
தற்போது கொஞ்சம் அந்த சாறு கெட்டிப்பட்டிருக்கும். அதன்பின் அடுப்பை அணைத்து, அந்த சாறை ஆற வைக்க வேண்டும். 
 
அதன்பின், நன்றாக சுத்தப்படுத்தப்பட்ட பாட்டில்களில் அதை இட்டு, குளிர்ச்சியாக மற்றும் உலர்ந்த இடத்தில் வைத்து விட வேண்டும். அதாவது, நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம். 
 
உண்ணும் முறை: 
 
ஒரு நாளைக்கு இரண்டு முறை நாம் அதை சாப்பிடலாம். காலையில் எழுந்து வெறும் வயிற்றிலும், அடுத்து இரவு உணவுக்கு முன்பும் சாப்பிட வேண்டும். 
 
இரண்டு டேபிள் ஸ்பூன் அல்லது ஒருவரின் மொத்த எடைக்கும், உருவத்திற்கும் ஏற்றாற்போல் சாப்பிடலாம். 
 
இப்படி தயாரிக்கப்படும், இந்த இயற்கை வயாகரா உடல் உறவில், ஒருவர் திருப்திகரமாக இயங்குவதற்கு பெரிதும் உதவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்களுக்கு காய்ச்சலா? அப்போ இந்த உணவையெல்லாம் தயவுசெய்து சாப்பிடாதீங்க..