Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள்: பள்ளிகள் இயக்குனர் உத்தரவு!

பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள்: பள்ளிகள் இயக்குனர் உத்தரவு!

Mahendran

, வியாழன், 4 ஏப்ரல் 2024 (10:44 IST)
பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து பள்ளிகள் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருவன;
 
▪️ அனைத்து வாகனங்களிலும் பெண் உதவியாளர் நியமிக்கப்பட வேண்டும்.
 
▪️ சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டு காட்சிகள் சேகரிக்கப்பட்டு காவல்துறையிடம் வழங்கப்பட வேண்டும்.
 
▪️ கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் 10 ஆண்டு அனுபவமுள்ள ஓட்டுநரையே பள்ளி வாகனம் இயக்க நியமிக்க வேண்டும்.
 
▪️ ஓட்டுநர்களுக்குத் தினமும் சுவாச சோதனை செய்தபின் தான் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டும்.
 
பள்ளி வாகனங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஏப்.5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு   உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி வாகனங்களில் மாணவியர்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக வரும் புகாரையடுத்து தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடி பழனிசாமி பிரதமராக வர வாய்ப்புண்டு: ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ