Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பார்த்திபன் படத்துக்கு ப்ரமோஷன் செய்யும் இயக்குனர் மணிரதனம்!

பார்த்திபன் படத்துக்கு ப்ரமோஷன் செய்யும் இயக்குனர் மணிரதனம்!

vinoth

, வியாழன், 4 ஏப்ரல் 2024 (10:23 IST)
வித்தியாச இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். படம் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும் பார்த்திபனின் வித்தியாச முயற்சி ரசிகர்களைக் கவர்ந்தது.

இதையடுத்து தனது அடுத்த படத்தை இயக்கி முடித்துள்ளார் பார்த்திபன். இந்த படத்தில் அவர் டீனேஜ் வயது இளைஞர்களின் வாழ்க்கையை சொல்ல உள்ளாராம். படத்துக்கு கேவ்மிக் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் பார்த்திபனே தயாரிக்கிறார். டி இமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்ற நிலையில் படத்தின் டிரைலரை இயக்குனர் மணிரத்னம் ஏப்ரல் 6 ஆம் தேதி வெளியிட உள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘மஞ்சும்மள் பாய்ஸ்’ சிதம்பரம் இயக்கத்தில் நடிக்கப் போகும் தமிழ் ஹீரோ!