Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"ரெபெல்"திரை விமர்சனம்

J.Durai

, சனி, 23 மார்ச் 2024 (11:40 IST)
ஸ்டுடியோ ஸ்கிரீன் ஸ்கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்து நிகேஷின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்"ரெபெல்"
 
இத்திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், மமிதா பைஜி, வெங்கிடேஷ், ஷாலு ரஹிம்,கருணாஸ்,ஆதிரா சுப்ரமணியம் சிவா உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
மூணார் நெற்றிக்குடி பகுதியில் வசிக்கும் இளைஞர் கதிர்(ஜி வி பிரகாஷ் குமார்) இவரது குடும்பம் அங்கிருக்கும் எஸ்டேட்டை நம்பி வழ்க்கை நடத்துகிறது.
 
இவர்களை போன்றே  பல குடும்பங்கள் இந்த எஸ்டேட்டை நம்பி வாழ்கிறது.
 
அவர்களின் வாழ்வை மாற்றும் நம்பிக்கையாக இருப்பது கல்வி ஒன்றே என்று  வறுமையிலும் நன்றாக படிக்கும் பல மாணவர்களுக்கு பாலக்காடு சித்தூர் கல்லூரியில் இடம் கிடைக்கிறது. 
 
அந்த கல்லூரியில் தமிழ்  மாணவர்களை ராகிங் என்ற பெயரில்  சித்ரவதை நடக்கிறது.
 
KSQ மற்றும் SFY என இரு மாணவ சங்கங்கள் தான் மொத்த கல்லூரியை ஆள்கிறது.
 
அதிலும் பதவியில் இருக்கும் KSQ பல அட்டகாசங்களை செய்து வருகிறது.
 
இதனால் தமிழ் மாணவன் ஒருவரது  இழப்பு ஒன்று நடக்கிறது இதன்  பிறகு, கேரள மாணவ சங்கங்களை எதிர்க்கிறார் கதிர்(ஜி.வி பிரகாஷ்) அவர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஜெயித்தாரா? இல்லையா என்பதே இப் படத்தின் கதை.
 
பதவிக்காக எப்படி எல்லாம் மாறுவார்கள்,எதிர் எதிர் அணிகள் எப்படி ஒன்று சோர்வார்கள்  என்பதைக் சிறப்பாக பேசியிருக்கிறார் இயக்குநர் நிகேஷின்
 
ஜி வி பிரகாஷ் வழக்கமான தனது நடிப்பை தாண்டி சிறப்பாக நடித்துள்ளார்.
 
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திற்கும் வெங்கிடேஷ்,ஷாலு ரஹிம் ஆகிய இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர்
 
கருணாஸ், சுப்ரமணியம் சிவா,ஆகியோர்கள் தங்களது அனுபவ நடிப்பில் அசத்தியுள்ளனர்
 
மற்ற காதாபத்திரத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்கள் கதா பாத்திரத்திற்கேற்றவாறு  சிறப்பாக நடித்துள்ளனர்.
 
அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
 
 மொத்தத்தில் "ரெபெல்"தமிழன் உணர்வு

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் ஆகிறாரா நடிகை சாய்பல்லவி?