Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று குஜராத் டைட்டன்ஸுடன் மோதல்… வெற்றிப் பாதைக்கு திரும்புமா டெல்லி கேப்பிடல்ஸ்?

இன்று குஜராத் டைட்டன்ஸுடன் மோதல்… வெற்றிப் பாதைக்கு திரும்புமா டெல்லி கேப்பிடல்ஸ்?

vinoth

, புதன், 24 ஏப்ரல் 2024 (07:15 IST)
ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் கடந்த மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை அனைத்து அணிகளும் 7 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளன. இப்போது லீக் சுற்றின் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுவரையிலான போட்டிகளின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

இந்நிலையில் இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடக்கும் நாற்பதாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே இதுவரை விளையாடிய போட்டிகளில் அதிக தோல்விகளைப் பெற்று புள்ளிப் பட்டியலில் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டும் வென்றுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் எட்டு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. இரு அணிகளுக்குமே இருவரும் போட்டிகள் மிக முக்கியமானவை. அதனால் இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாகப் போராடும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைசி ஒரு பந்தை சந்தித்த தல தோனி.. அதிலும் ஒரு பவுண்ட்ரி.. அதிர்ந்தது சேப்பாக்கம்..!