Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கான சில மருத்துவ குறிப்புக்கள் !!

Fever
, திங்கள், 10 அக்டோபர் 2022 (10:48 IST)
குழந்தைகளுக்கு திடீரென்று காய்ச்சல் வந்தால் முதலில் உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைப்பது நல்லது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் தெர்மோ மீட்டர் வைத்திருப்பது நல்லது.


காய்ச்சல் 100 டிகிரி செல்சியசிற்கு அதிகரிக்காமல் பார்த்துகொள்ள வேண்டும். காய்ச்சல் இருந்தால் குழந்தைகள் மெல்லிய பருத்தி ஆடை அணிவது நல்லது உடல் வெப்பநிலை மேலும் அதிகரிக்காமல் இதை தடுக்கும். குழந்தைக்கு வெப்பநிலை அதிகரித்தால் குழந்தைகளை ஏஸி அறையில் படுக்க வைக்காமல் ஃபேனில் தூங்க வைக்கலாம். குழந்தைகளின் உடல் வெப்பநிலை அதிகரிப்பது போல் இருந்தால் உடனடியாக தெர்மோமீட்டர் கொண்டு அளவிட வேண்டும்.

குடிநீரை எப்போதும் காய்ச்சி ஆற வைத்துக் குடித்தால், மழைக்காலத்திலும் குளிர் காலத்திலும் வருகிற காய்ச்சல் வராது. உணவில் மிளகு ரசம், இஞ்சி ரசம், பூண்டு ரசம் என்று தினமொரு ரசம் சேர்த்துக்கொண்டால், உடலில் எதிர்ப்புச்சக்தி அதிகமாகும்.

குழந்தைக்கு காய்ச்சல் வந்தவுடன் குடிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு கொதிக்க விடலாம். தண்ணீர் கொதிக்க வைத்து அதில் துளசி இலைகளை சேர்த்து வெதுவெதுப்பாக ஆறியவுடன் கொடுத்தால் பலன் கிடைக்கும். காய்ச்சல் குணமாகும் வரை துளசி தண்ணீர் கொடுக்கலாம்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு லேசான ஆடைகளை அணிவித்து, காற்றோட்டமான அறையில் வைத்திருக்க வேண்டும். முக்கியமாக குழந்தையை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். லேசான காய்ச்சல் என்றால் 2 முதல் 3 நாட்களில் குணமாகிவிடும், ஒருவேளை தீவிரமான அறிகுறிகள் தென்பட்டால் 48 மணிநேரத்திற்குள் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

சத்துக்குறைபாடுள்ள குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவுள்ள குழந்தைகளுக்கும்தான், பருவநிலை மாறும்போது உடனடியாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். அதனால் காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் ஏற்படுகின்றன. எனவே குழந்தைகளைக் கூடுதல் கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும். 

Edited by Sasikala
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 2,424 பேர் பாதிப்பு; 15 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!