ரஷியாவில் ஏற்பட்ட படகு விபத்தில் 10 பேர் பலி

செவ்வாய், 12 ஜூன் 2018 (16:24 IST)
ரஷ்யா நாட்டின் வோல்கேர்ட் நகரில் உள்ள நதியில் ஏற்பட்ட படகு விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
ரஷ்யா நாட்டில் உள்ள வோல்கேர்ட் பகுதியில் உள்ள நதியில் மக்கள் படகு சவாரி செய்வது வழக்கம். இதனால் அங்கு பெருமளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். நேற்று இந்நதியில் வழக்கம் போல் மக்கள் பயணம் சென்றிருந்த போது இரண்டு படகுகள் ஒன்றோடு ஒன்று மோதின.
 
இதனால் அப்படகில் பயணித்த 5 பேர் நதியில் மூழ்கி உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டனர். இந்த துயர சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் காணாமால் போன ஒருவரை அங்குள்ள மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
 
இந்த விபத்து ஏற்பட்ட வோல்கேர்ட் நகரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING