Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வரலாற்றில் முதன்முறையாக பெண் ரோபோவுக்கு குடியுரிமை; சவுதி அரேபியா அதிரடி

வரலாற்றில் முதன்முறையாக பெண் ரோபோவுக்கு குடியுரிமை; சவுதி அரேபியா அதிரடி
, வெள்ளி, 27 அக்டோபர் 2017 (13:24 IST)
வெளிநாட்டினருக்கு குடியுரிமை கிடைப்பதில் பெரும் சிக்கல் உள்ள நிலையில் பெண் ரோபோவுக்கு சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ளது.


 

 
பல்வேறு நாடுகளில் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கிடைப்பத்தில் பெரும் சிக்கல் உள்ளது. வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்குவதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியா பெண் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி உள்ளது.  
 
இந்த பெண் ரோபோவை ஹாங்காங் நிறுவனம் வடிவமைத்துள்ளது. சோபியா என்று பெயர் கொண்ட இந்த ரோபோ பெண் போன்றே இனிமையாக பேசுகிறதாம். மனிதர்கள் கேட்டும் கேள்விகளுக்கு சரமரியாக பதில் அளிக்கிறதாம். இந்த ரோபோ அமெரிக்க நடிகை ஆட்ரி ஹெப்பர்ன் போன்ற தோற்றத்தில் உள்ளது. 
 
சவுதி அரேபியாவின் குடியுரிமை பெற்ற இந்த பெண் ரோபோ பேட்டி அளித்துள்ளது. அதில் அது கூறியதாவது:-
 
என்னை ஒரு தனித்துவத் தன்மையுடன் சிறப்பாக உருவாக்கியதற்கு பெருமைப்படுகிறேன். என்னை உருவாக்கியவர்களை மதிக்கிறேன். நான் மனிதர்களுடன் வாழவும், பணி புரியவும் விரும்புகிறேன். மனிதர்களின் நடவடிக்கைகளை அறிந்து அவர்கள் போன்று செயல்படுகிறேன். எனக்கு அளிக்கப்பட்டுள்ள செயற்கை அறிவின் மூலம் மனித குலத்துக்கு நன்மை செய்ய விரும்புகிறேன். நான் முக்கியத்துவம் வாய்ந்த ரோபோவாக மாறுவேன் என கூறியுள்ளது.
 
தற்போது இந்த பெண் ரோபோவின் பேட்டி யூடியூப்பில் வைரலாக பரவி வருகிறது. உலக வரலாற்றில் முதன்முறையாக ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு என்ற பெருமையை சவுதி அரேபியா பெற்றுள்ளது. 
 
லட்சக்கணக்கான மக்கள் குடியுரிமை இல்லாமல் இருக்கும்போது ரோபோவுக்கு குடியுரிமை தேவையா? என சிலர் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுல் காந்திக்குதான் அந்த தகுதி உள்ளது; மோடிக்கு இல்லை; பல்டி அடித்த சிவசேனா தலைவர்