Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2 அமெரிக்க பெண்களை விடுவித்த ஹமாஸ் அமைப்பு

america
, சனி, 21 அக்டோபர் 2023 (14:17 IST)
200 பேரை ஹமாஸ் அமைப்பு பணய கதைகளாக சிறைபிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை   தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மற்றும்  ஹமாஸ்  தீவிரவாத அமைப்புக்கு இடையே கடும் போர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இஸ்ரேல் தரைவழி தாக்குதலை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 

காசா மற்றும் லெபனான் எல்லை பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அகற்றப்பட்டு வருவதாகவும் பொதுமக்களை அகற்றும் பணி முடிவடைந்ததும் இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தாசா பகுதிகள் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருவதாகவும்  பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தாக்குதல் தாக்குவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என்று அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன

இந்த நிலையில் இரண்டு அமெரிக்கர்களை விடுவித்துள்ளது ஹமாஸ் அமைப்பு.காஸா  போரில் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட ஜூடித் தை ரானன் மற்றும் அவரது மகள் நடாலி ரானன்ன் ஆகிய இரண்டு 2 அமெரிக்க பெண்களை ஹமாஸ் அமைப்பு சிறைப்பிடித்தனர்.

அவர்களை விடுவிக்க வேண்டும் அமெரிக்க கோரிக்கை விடுவித்திருந்தது. இந்த நிலையில், ஜூடித்துக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் மனித நேய அடிப்படையில், விடுவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது ஹமாஸ் குழு.

மேலும், இதுவரை சுமார் 200 பேரை ஹமாஸ் அமைப்பு பணய கைதிகளாக சிறைபிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரி  தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாள்தோறும் 100 கொடிக் கம்பங்கள் நடப்படும் - அண்ணாமலை