Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்ட கூகுள் நிறுவன பெண் அதிகாரி

பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்ட கூகுள் நிறுவன பெண் அதிகாரி
, செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (13:01 IST)
உலகின் மிகச்சிறந்த தேடுதளமான கூகுளின் பெண் அதிகாரி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் கணக்கு மேலாளராக பணிபுரிந்து வந்தவர் இவர்.


 
 
பிரிஸ்டன் கிரமத்தில் தனது தாயுடன் வசித்து வந்த மார்கோட்டிக்கு வயது 27 ஆகும். இவர் சம்பவம் நடந்த அன்று வேலைக்கு சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது தாய் அவரது மொபைலுக்கு தொடர்கொண்டுள்ளார் ஆனால் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனையடுத்து அவர் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என தகவல் தெரிவித்தார்.
 
இதனையடுத்து காவல் துறை நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் மார்கோட்டி அவரது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் மரக்கட்டைகளுக்கு இடையே எரிக்கப்பட்ட பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
 
காவல்துறை நடத்திய விசாரணையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனையின் படி அவரது தலை மற்றும் கால் பகுதிகள் நன்கு எரிந்துள்ளது.
 
குறைவான மக்களே வசிக்கும் அந்த கிராமத்தில் குற்ற செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குற்றவாளி யார் என்பதை தீவிரமாக காவல்துறை விசாரித்து வருகிறது.
 
மார்கோட்டியின் மரணம் குறித்து அவர் பணிபுரிந்த கூகுள் நிறுவனம் இரங்கள் தெரிவித்துள்ளது. அவரது இறப்பு செய்தி அவர்களுக்கு பேரதிர்ச்சியாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈஷாவிடம் இருந்து மகனை மீட்டுத் தாருங்கள்’ : தாய் கண்ணீர்