பலி கொடுக்கப்பட்ட 140 குழந்தைகள்: பெரு நாட்டில் அதிர்ச்சி!

சனி, 9 ஜூன் 2018 (16:10 IST)
பெரு நாட்டில் திருஜிலோ என்ற நகரில் தொலபொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டிருந்தனர். ஆராய்ச்சி பணியின் போது 140 குழந்தைகளின் எலும்புகூடுகள் கண்டறியப்பட்டுள்ளது. 
 
140 குழந்தைகள் மற்றுமின்றி 200 ஓட்டக இன மிருகங்கள் பலி கொடுக்கபட்டு புதைக்கபட்டு இருந்தது தெரியவந்து உள்ளது. அந்த சமயத்தில், அந்த பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த வெள்ளபெருக்கால், அந்த ஊரே அழியும் நிலை ஏற்பட்டது. இதனால் வெள்ளப்பெருக்கை தடுக்க கடவுள் நம்பிக்கை என்ற பெயரில், 140 குழந்தைகள் பலி கொடுக்கப்பட்டு கடல் இருக்கும் திசை அருகில் மண்ணில் புதைப்பட்டுள்ளனர்.
 
இதோடு 200 ஓட்டக இன மிருகங்களும் புதைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட குழந்தைகளின் வயது 5-ல் இருந்து 14 வரை இருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த சமபவ அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

LOADING