Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

1000 ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட அரசரின் உடல்: பார்த்தவுடன் வயிற்றை பிரட்டும் வீடியோ!!

1000 ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட அரசரின் உடல்: பார்த்தவுடன் வயிற்றை பிரட்டும் வீடியோ!!
, செவ்வாய், 2 ஜனவரி 2018 (15:25 IST)
பண்டைய காலத்து எகிப்த் நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறு உலகிற்கு செல்வதற்காக, அவர்களது உடல் தேவைப்படும் என்பதற்காக அரசர்களின் சடலங்களை பதப்படுத்தி வைப்பது வழக்கமான ஒன்று. இவைதான் மம்மிக்கள் என அழைக்கப்படுகிறது. 
 
அரசர்களின் உடல்களை பதப்படுத்துவதற்கு முன்னர், நுரையீரல், கல்லீரல், மூளை, குடல் ஆகியவை அகற்றப்படும். ஆனால் இதயம் மட்டும் அப்படியே வைக்கப்படும். இதற்கு காரணம், இதயம்தான் மனித உடலை அடுத்த ஜன்மத்திற்கு கொண்டு செல்லும் என அந்த காலத்து மக்கள் நம்பினர் என கூறப்படுகிறது. 
 
வெளியே எடுக்கப்பட்ட உடல் உறுப்புகளில் மூளையை தவிர மீத அனைத்தும் பத்திரப்படுத்தப்படும். உடலை புதைப்பதற்கு முன்னர் அதனை 40 நாட்கள் Natron என்னும் வேதிப்பொருள் தடவி உலறவைத்துவிடுவர். பின்னர் உடல் சுருங்கிய நிலையில் காணப்படும். பிறகு எண்ணையில் ஊற வைத்த துணி உடலில் திணிக்கப்படும்.
 
அதன் பின்னர் நீலமான துணியால் உடலை சுற்றி அதனை சவப்பெட்டிக்குள் வைத்து, இறந்த அரசரின் முகம் பதித்த கவசம் கொண்டு மூடப்படும். தற்போது, 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட அரசரின் உடலை வெளியே எடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 
 
இதோ அந்த வீடியோ.....

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவனின் சிகிச்சைக்காக பெற்ற குழந்தையை விற்ற மனைவி