Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பீரோவை எந்த திசையில் வைப்பதால் செல்வ வளம் உண்டாகும்...?

பீரோவை எந்த திசையில் வைப்பதால் செல்வ வளம் உண்டாகும்...?
, திங்கள், 27 ஜூன் 2022 (15:32 IST)
முன்னோர்கள் தங்கள் அனுவங்கள் மூலம் உணர்ந்த விஷயங்களையே சாஸ்திரங்களாக கூறியுள்ளனர்.


நம் முன்னோர்கள் பஞ்சபூதங்களை அடிப்படையாக வைத்தே கிணறு எந்த இடத்தில் வெட்ட வேண்டும், எங்கு ஜன்னல் வைக்க வேண்டும், எந்த திசையில் வீடு கட்ட வேண்டும் என்று கணித்துள்ளார்கள். அது போலவே பீரோ எப்படி எந்த திசையில் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

பணம் மற்றும் நகைகள் வைக்க கூடிய பீரோ கன்னி மூலையான தென்மேற்கு திசையை நோக்கி வைக்கவேண்டும். அதாவது பீரோவின் முதுகு பக்கம் தென்மேற்கு மூலை அறையில் தெற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். பீரோவின் கதவு திறக்கும் திசை, வடக்கு திசையாக இருக்க வேண்டும்.

வடதிசை குபேரனுக்கு ஏற்ற திசை என்பதால் சிறப்பாக இருக்கும். இந்த முறையில் பீரோவை வைப்பதற்கு வீட்டில் அமைப்பு இல்லாதார்கள் இந்த முறையை பயன்படுத்தியும் பீரோவை வைக்கலாம்.

பீரோ வைக்க சிறந்த இரண்டாம் மாற்று திசை, வடமேற்கு மூலை அறையில் மேற்கு பக்கமாக உள்ள சுவற்றின் அருகே பீரோவை கிழக்கு திசை நோக்கி வைக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விநாயகரை வழிப்பட உகந்த தேய்பிறை சதுர்த்தி விரதம் இருக்கும் முறையும் பலன்களும் !!