Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடும்ப தலைவிகளுக்கான சமையல் டிப்ஸ்

குடும்ப தலைவிகளுக்கான சமையல் டிப்ஸ்
சாம்பாரை  இறக்கும்போது, அதில் வறுத்துப் பொடித்த தனியாப் பொடியைத் தூவி இறக்கினால், கும்மென்று வாசனை தூக்கும். மோர்க் குழம்பு செய்யும்போது, சிறிதளவு ஓமத்தை அரைத்துவிட்டால், குழம்பு ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

 
நெய் காய்ச்சும்போது, சிறிதளவு உப்பு சேர்த்துக் காய்ச்சினால், நெய் வாசனையாக இருப்பதோடு, நீண்ட நாள் கெடாமலும்  இருக்கும்.
 
பச்சை மிளகாய் சேர்த்து சட்னி முதலியவற்றை அரைக்கும்போது, முதலில் மிளகாயைத் துண்டுகளாக்கி வெந்நீரில் போடவும்.  சற்று ஆறியதும் எடுத்து அரைத்தால், மிளகாய் நன்கு மசிவதுடன், சட்னி வெகு நேரம் கெட்டுப் போகாமலும் இருக்கும்.
 
வடை, பக்கோடா செய்யும்போது, ஒரு தேக்கரண்டி ரவை கலந்து செய்தால், பக்கோடா மொறுமொறுப்பாக இருக்கும். இட்லிப்பொடி அரைக்கும்போது, சிறிது வேர்க்கடலை சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டால், சுவை கூடுதலாகும்.
 
பதினைந்தே நிமிடங்களில் தேன்குழல் தயாரிக்க வேண்டுமா..? ஒரு ஆழாக்கு மைதா மாவை ஐந்து நிமிடங்கள் ஆவியில்  வைத்து எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் சூடான எண்ணெய், ஒரு ஸ்பூன் நெய் சேருங்கள். பிறகு, மாவில் அரை ஸ்பூன் சீரகம்,  சிறிது பெருங்காயத்தூள், உப்பு கலந்து, தேவையான தேங்காய்ப்பால் ஊற்றி முறுக்கு பதத்துக்கு மாவு பிசைந்து, அச்சில்  பிழிந்தால், மொறுமொறு தேன்குழல் தயார்!
 
ரவா தோசை செய்யும்போது 2 தேக்கரண்டி சோளமாவு சேர்த்து செய்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்று  இருப்பதோடு, உடம்பிற்கு நல்லது.
 
ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் ஒரு ஸ்பூன் டீத்தூள், கொஞ்சம் சோப்புத் தூள் போடுங்கள். அதில் வெள்ளிப் பாத்திரங்கள், விளக்குகள் முதலியவற்றைப் போட்டு தண்ணீர் ஆறும் வரை ஊற வையுங்கள். பிறகு, எடுத்து அழுத்தித் துடைத்தால் வெள்ளிப் பாத்திரங்கள் பளீரிடும்.
 
எதிர்பாராமல் விருந்தாளி வந்துவிட்டால், பஜ்ஜி போட காய்கறி இல்லையே என்று கவலைப்படவேண்டாம். பஜ்ஜிக்கான மாவைத் தயாரித்து,அதில் தோலுடனான வறுத்த வேர்க்கடலையை தோய்த்து பஜ்ஜி போடலாம். இது சுலமான பஜ்ஜி. சுவையாகவும் இருக்கும்.
 
இரவில் பால் சாப்பிடும் பழக்கம் இருந்தால், பாலில் 6 பூண்டுப் பற்களை போட்டுக்காய்ச்சி சாப்பிட்டால், கொலாஸ்ட்ரல்  பிரச்சினையே வராது.
 
இரண்டு புதிய டூத் பிரஷ்களை வாங்கி ஒன்றை சமையலறை சிங்க், குழாய்களின் கீழ் பாகம், போன்ற இடங்களை சுத்தம் செய்யவும், மற்றொன்றை மிக்ஸி, கிரைண்டர் போன சாதனங்களை சுத்தம் செய்யவும் உபயோகிக்கலாம். கைகளால் சுலபமாக  எட்ட முடியாத இடுக்குகளிலும் பிரஷ் கொண்டு எளிதாகவும் நன்றாகவும் சுத்தம் செய்யலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் எடையை குறைக்க உதவும் வெற்றிலை